‘காதல் – Fail’… இன்று மாலை வெளியாகிறது #NilavukuEnMelEnnadiKobam படத்தின் செகண்ட் சிங்கிள்!

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக…

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ராயன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. மேலும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி டிரெண்ட்டிங் ஆனது.

கோல்டன் ஸ்பேரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடலான ‘காதல் Fail’ என்ற பாடல் இன்று (நவ.25) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.