முக்கியச் செய்திகள் தமிழகம்

லாட்டரி சீட்டு விற்பனை: நியூஸ் 7 தமிழ் செய்தியை சுட்டிக் காட்டிய ராமதாஸ்!

சேலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருவது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வீடியோ ஆதாரங்களுடன்  செய்தி வெளியிட்ட நிலையில், அந்தச் செய்தியை சுட்டிக் காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல நகரங்களில் இது சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதனையடுத்து அவ்வப்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சேலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை நியூஸ் 7 தமிழ் கள ஆய்வில் வெளிக் கொண்டுவந்தது. இதில், சேலம் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.

அவர்கள் பயன்படுத்திய லாட்டரி சீட்டுகள், அதை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் பல வீடியோவில் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாவண்யா உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவதை காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Jeba Arul Robinson

“நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்“ – இந்து சமய அறநிலையத்துறை

Halley Karthik

instagram மூலம் கஞ்சா விற்பனை

Web Editor