திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது .…

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது . இது தமிழ்நாடு -கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதையாக  உள்ளது.
இந்த நிலையில் புனேவில் இருந்து பிவிசி பைப் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று
திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது. சுதாரித்துக் கொண்டு ஓட்டுநர் லாரியில் இருந்த குதித்து உயிர் தப்பினார்.
இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்றனர். சத்தியமங்கலத்தில்  இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.