முக்கியச் செய்திகள் சினிமா

வருகிறது ‘லோகி’ சீசன் 2

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘லோகி’ இணையதள தொடரின் 2வது சீசனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரம் ‘லோகி’. சூப்பர் ஹீரோ தோரின் சகோதரரான லோகி, அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வில்லனாக தோன்றியிருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த டாம் ஹிடுல்ஸ்டனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது லோகி தனி இணையதள தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டிஸ்னி+ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த தொடரின் 6வது மற்றும் கடைசி எபிசோட் வெளியானது. இந்த எபிசோடின் இறுதியில் லோகி 2வது சீசனுக்கான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதே போல், இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தியாக, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த Happy Phirr Bhag Jayegi படத்தில் இடம்பெற்ற “Swag Saha Nahi Jaye” என்ற பாடல் லோகி தொடரின் கடைசி எபிசோடில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

Halley Karthik

வட இந்திய லாரி மோதியதில் உடைந்த “பெரியார்” சிலை: விழுப்புரத்தில் பரபரப்பு!

Arivazhagan Chinnasamy

நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

EZHILARASAN D