கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை உறுதிசெய்யும் வகையில் லோகேஷ் கனகராஜ் “ஆரம்பிக்கலாங்களா” எனும் ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்கி வருகிறார். கமலஹாசன் கடந்த சில மாதங்களாக நடந்த தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்காகப் பிரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தன்னுடைய அரசியல் கட்சியின் வேலையில் முழு வீச்சில் செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் தற்போது ஒரு அமைதியான சூழல் இருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார். இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசனைக் கதாநாயகனாக வைத்து விக்ரம் எனும் படத்தினை இயக்க உள்ளார். நடிகரும் மக்கல் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசனின் தேர்தல் பரப்புரை முடிந்ததை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இனி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதிசெய்யும் வகையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் “லோகேஷ் விமானத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து” எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்ததுடன் “ஆரம்பிக்கலாங்களா” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் கமல்ஹாசனையும் “டேக்” செய்துள்ளது படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதைக் காட்டும் வகையில் உள்ளது. மேலும் இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.