மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதன் முழு விவரங்களை காணலாம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீட்டை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நிறைவு செய்துள்ளன.
பாஜக இதுவரை 5 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. 3வது மற்றும் 4-ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டனர்.
4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, விருதுநகரில் ராதிகா சரத்குமார், தென்காசியில் ஜான் பாண்டியன், புதுச்சேரியில் நமச்சிவாயம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், திருவள்ளூரில் பாலகணபதி, வடசென்னையில் பால் கனகராஜ், திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், சிதம்பரத்தில் கார்த்தியாயினி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், நாகை, தஞ்சை, மதுரை ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதேபோல கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடம் , பாமகவிற்கு 10 இடங்கள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1 இடம் என தொகுதிப் பங்கீட்டை பாஜக இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன் முழு விவரங்களை காணலாம்.
கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் – செந்தில்நாதன்
கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் – நரசிம்மன்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் வேப்புமனு தாக்கல் செய்தார்.பாமக, ஓபிஎஸ் அணியினர் உடனிருந்தனர்
ஆரணி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமார்
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அ.கணேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆரணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் சி ஏழுமலை ,பையூர் சந்தானம் உள்ளிட்டோர்.
திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் – திலகபாமா
பாஜக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன்
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர்
பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஐஜேகே கட்சியின் நிறுவனர் டி.ஆர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான க.கற்பகத்திடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியின் போது பாஜக மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன்,ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
தருமபுரி பாமக வேட்பாளர் – செளமியா அன்புமணி
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தி இடம் வேட்புமனுவை வழங்கினார். உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
வேலூர் தொகுதி – புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்
பாஜக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், “கடந்த தேர்தலில் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றேன். இந்த முறை வெற்றி பெறுவேன். குடியுரிமை சட்டம் எங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. வெளிநாடுகளில் இருந்து வரும் தீயசக்திகளை கட்டுப்படுத்துவதற்காக தான். குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் சேர்க்க வலியுறுத்துவோம்” இவ்வாறு தெரிவித்தார்.
தென்காசியில் ஜான்பாண்டியன் மனுதாக்கல்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் 500க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன், மேளாதாளம் முழுங்க ஊர்வலமாக வளம் வந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நீலகிரியில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உடனிருந்தார்.
மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வன் வேட்புமனு தாக்கல்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் செனாய் நகர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அவருடன் இருந்தனர்.
கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் ஆ.நமச்சிவாயம் வேட்புமனு தாக்கல்
புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஆ.நமச்சிவாயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடனிருந்தார்.
கடலூரில் தங்கர் பச்சான் வேட்புமனு தாக்கல்
கடலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூரில் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விருதுநகரில் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல்
திருநெல்வேலி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
மதுரையில் ராம சீனிவாசன் வேட்புமனு தாக்கல்
மதுரை மக்கவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சிவகங்கையில் தேவநாயன் யாதவ் வேட்புமனு
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.














