முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காணும் பொங்கல் தினமான ஜனவரி 16ம் நாள் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி,
1) அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள் அரங்குகளில் 50% இருக்கைகள் அல்லது 200 நபர்கள் வரை பங்கேற்கலாம்.

2) திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பின்றி பணி செய்ய அனுமதி

3) நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு நடைமுறை தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள் தவிர, மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் இறுதிப்போட்டி: கொல்கத்தா சுழலை சமாளிக்குமா சிஎஸ்கே?

Halley Karthik

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்

EZHILARASAN D

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

EZHILARASAN D

Leave a Reply