முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன்? பாமக விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பாமக விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

இந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தேர்தல் நடைபெற உள்ள 7 மாவட்டங்களில் பாமக பலமாக உள்ளது. எனவே பாமகவில் அதிகமானோருக்கு வாய்ப்பு தருவதற்காக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

அதிமுகவுடன் முரண்பாடு ஏற்பட்டதை போன்ற தோற்றம் உருவானதில் உண்மையில்லை என்றும், அதிமுகவுடன் நட்போடுதான் இருக்கிறோம். அதிமுக அரசு மீது நேற்று எந்த விமர்சன கருத்தையும் கூறவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்.

இதுவரை இருந்த கூட்டணியில் தொடர்வதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்ற அவர், “சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மட்டுமே பாமக-அதிமுக ஒப்பந்தம் போடப்பட்டது” என்றும் விளக்கினார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா பணிகளில் பயிற்சி மருத்துவர்கள்!

தேர்தலால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது: கிருஷ்ணசாமி

Ezhilarasan

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

Jayapriya