முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதில் நேற்றுவரை 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. வரும் 25-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம் எனவும் அன்றைய நாளே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

Jeba Arul Robinson

முன்விரோதத்தால் பெரியப்பா கொலை; மகன் கைது

Saravana Kumar

200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்!

Halley karthi