டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள், சாக்லேட் விற்பனை களைக்கட்டியுள்ளது. குறிப்பாக, டெய்ரி மில்க் சாக்லேட்டிற்கும் காதலர் தினத்துக்கும்…

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள், சாக்லேட் விற்பனை களைக்கட்டியுள்ளது. குறிப்பாக, டெய்ரி மில்க் சாக்லேட்டிற்கும் காதலர் தினத்துக்கும் ஒரு சொந்தம் உண்டு. தங்களது, காதலன் அல்லது காதலிக்கு டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்து காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவர். 

இந்நிலையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவர் ஆசையாக சாப்பிடுவதற்கு ரூ.45 கொடுத்து டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியுள்ளார். அதனை பிரித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், புழு ஊர்ந்து செல்லும் வீடியோவுடன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில், அமீர்பேட்டை மெட்ரோ நிலையத்தில் உள்ள ரத்னதீப் ரீடெய்ல் ஸ்டோரில் இருந்து ரூ.45 செலுத்தி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியதாக அதன் பில்லையும் அதனுடன் அவர் இணைத்துள்ளார். மேலும், “காலாவதியாகும் பொருட்களுக்கான தர சோதனை உள்ளதா? பொது சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு?” எனவும் ராபின் சாக்கியஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.