மது பார்களை மூடும் வழக்கு: “மேல்முறையிட்டை திரும்ப பெற வலியுறுத்தல்”

மது பார்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மதுபான…

மது பார்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மதுபான பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில், தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிமம் நிறைவடைந்துள்ள பார்கள் மற்றும் உரிமம் இல்லாத 3 ஆயிரத்து 719 பார்களை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், மற்றவை 6 மாதங்களில் மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுவிலைகள் உயர்வு, புதிய மதுக்கடைகள் திறப்பு, இன்னொருபுறம் பார்களை மூடுவதற்கு எதிரான மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது மதுவணிகத்தை நம்பித் தான் இந்த அரசு செயல்படுகிறதோ? என்ற எண்ணம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மதுபான பார்களை மூடும் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதுடன், தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.