முக்கியச் செய்திகள் இந்தியா

ஹோட்டலுக்குள் புகுந்த சிங்கம்!

குஜராத்தில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்த சிங்கத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்திலுள்ள ஜூனாகத் மாவட்டத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் ஒன்றுள்ளது. இந்த சரணாலயத்தில்தான் தற்போது ஆசிய சிங்கங்களில் நிறைய அரிய வகையானவைகள் வாழ்ந்து வருகிறது. ஜூனாகத் நகரின் மையப்பகுதியில் சரோடிவர் போர்டிகா எனும் ஹோட்டலுடன் இணைந்து தங்கும் விடுதி ஒன்றுள்ளது. அங்கு கடந்த திங்கள்கிழமை அதிகாலை சிங்கம் ஒன்று ஹோட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்துவிட்டு மீண்டும் வெளியே செல்கிறது. அந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் நன்கு பதிவாகியுள்ளது.

அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வனவிலங்குகள் பாதை மாறி அல்லது பசிக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாக நடந்து வருவதே, ஆனால் மனிதர்களால் அவ்விலங்குகளுக்கு ஏதேனும் அசம்பாவிதங்களும், விலங்குகளால் மனிதர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பு வனத்துறை துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர்வாசிகள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஆண் நண்பரை, எரித்துக் கொலை செய்ய முயன்ற பெண்!

Saravana Kumar

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

கன்னித் தமிழை கணினிக்கு கொண்டு வந்த அனந்தகிருஷ்ணன்!

Halley karthi

Leave a Reply