இரண்டு மடங்காக உயர்ந்த தனியார் ஆயுள் காப்பீட்டுத் தொகை

ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள், ஆயுள் காப்பீடு பெறுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் காப்பீடு நிறுவனங்களில் ஆயுள் காப்பீடு செய்வது அதிகரித்து வரும் அதேநேரத்தில், காப்பீடு செய்தவர்கள்,…

ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள், ஆயுள் காப்பீடு பெறுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் காப்பீடு நிறுவனங்களில் ஆயுள் காப்பீடு செய்வது அதிகரித்து வரும் அதேநேரத்தில், காப்பீடு செய்தவர்கள், காப்பீட்டில் இருந்து claim பெறுவதும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2019-20 நிதியாண்டிலும், 2020-21 நிதியாண்டிலும் தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள், claim செய்த தொகையைவிட, 2021-22 நிதியாண்டில் claim செய்த தொகை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீராம் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு செய்தவர்களில் 2019-2020 நிதி ஆண்டில் 27,184 பேர் claim செய்துள்ளனர். 2020-2021 நிதி ஆண்டில் 25,054 பேர் claim செய்துள்ளனர். இதுவே, 2021-2022 நிதி ஆண்டில் 53,800 ஆக அதிகரித்துள்ளது. 2021-2022 நிதி ஆண்டில் ரூ.549 கோடி பாலிசிதாரர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும், இது claim கோரிய தொகையில் 95.80 சதவீதம் என்றும் ஸ்ரீராம் ஆயுள் காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஏஜீஸ் ஃபெடரல் ஆயுள் காப்பீடு நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டில் 2,644 பேர் claims கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2019-2020 நிதி ஆண்டில் 1,408 ஆகவும், 2020-2021 நிதி ஆண்டில் 1,800 ஆகவும் இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.