பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக்கூடாது என நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு திமுக சார்பில் கடிதம்..

பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக்கூடாது என மத்திய நிலைக்குழுவிற்கு திமுக மூத்த வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும்…

பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக்கூடாது என மத்திய நிலைக்குழுவிற்கு திமுக மூத்த வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது.

இத்தகைய  பொது சிவில் சட்டத்தி இந்தியாவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  பொது சிவில் சட்டம் அவசியமானது என பிரதமா் மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தை பா.ஜ.க. முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனா். அதோடு, எதிர்கட்சியினரும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, உள்பட நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாட்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கட்சிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசித்தது. அப்போது, பொதுசிவில் சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக்கூடாது என மத்திய நிலைக்குழுவிற்கு திமுக மூத்த வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதில், “21வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு முக்கியமான பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. ஆனால் அவற்றை எதையும் பரிசீலிக்காமல் 22வது சட்ட ஆணையம் மீண்டும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்பதும் இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுப்பதும் தேவையற்ற ஒன்று.

மத்திய பாஜக அரசு 2024ம் ஆண்டு பொது தேர்தலை மனதில் கொண்டு பொது சிவில் சட்டத்தை அணுகுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் கருத்து கேட்பு உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும் னத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.