சென்னையில் வழக்கத்தை விட குறைவாக மழைப்பதிவு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்,  தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்,  தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15% குறைவாக பெய்திருக்கிறது. சென்னையிலும் இயல்பை விட 30% குறைவாகவே மழை பெய்திருக்கிறது  என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகாலை முதல் வில்லிவாக்கம்,  பெரம்பூர்,  வியாசர்பாடி ஜீவா,  சென்ட்ரல் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 23.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில்,  நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக குன்னூர் பகுதியில் 81.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதனை தொடர்ந்து, தருமபுரி, ராமநாதபுரம் தொண்டி பகுதிகளில் அதிகபட்சமாக 81.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், கன்னியாகுமரியில் 29.6 மில்லி மீட்டர் மழையும், கோயம்பத்தூர் வால்பாறை 25.6 மில்லி மீட்டர் மழையும், பதிவாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.