பந்தலூர் அருகே இரவில் உலா வரும் சிறுத்தை: பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிராம சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பந்தலூர் இன்கோ நகர் கிராமப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம்…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிராம சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பந்தலூர் இன்கோ நகர் கிராமப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரவு நேரங்களில் பணியை முடித்து வீட்டுக்கு திரும்பவும், அதிகாலை தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் அச்சம் அடைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர்.
எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடங்களில் கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானால் மேற்கொண்டு அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அசம்பாவிதம் ள ஏற்படாமல் இருக்க அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம் எனவும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.