கோபிசெட்டிபாளையம் அருகே கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது,
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொங்கர்பாளையம்,சமனாங்காட்டு தோட்டத்தை
சேர்ந்தவர் ராமசாமி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாட்டுடன் இருந்த பிறந்து 15 நாட்களே ஆன கன்று குட்டி இறந்து கிடந்தது.
இது குறித்து ராமசாமி அளித்த தகவலின் அடிப்படையில் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்து அப்பகுதி விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர்.
கன்று குட்டியை கொன்றது சிறுத்தை என உறுதி செய்த வனத்துறையினர்
சிறுத்தையின் கால்தடங்கள் பதிவான இடங்கள் மற்றும் அருகில் உள்ள விவசாய தோட்டம்
உள்ளிட்ட 5 இடங்களில் கேமாரக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை
கண்காணித்து வருகின்றனர்.







