அரசு அதிகாரிகளை அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.
கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சுவர்களில் ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் மேம்பாட்டிற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளியிட வேண்டும் என தெரிவித்த செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதியின்படி ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
கோவையில், அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசுவரை அதிமுகவினர் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.