இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல் | ஹமாஸ் துணை தலைவர் லெபனானில் பலி!…

இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக லெபனான் மற்றும் பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 3 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல்…

இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக லெபனான் மற்றும் பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் இதற்கு பதிலடியாக காஸா நகரில் நடத்திய தாக்குதலில் 21 ஆயிரத்து 978 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பெய்ரூட்டில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரியும், இரண்டு கஸ்ஸாம் தலைவர்களும்  அடங்குவதாக   அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.