ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறைஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்திய தூதரகத்தின் உதவி எண் அறிவிப்பு! நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.







