முன்னாள் பிரதமர் #ManmohanSingh உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில்…

Leaders pay tribute to former Prime Minister Manmohan Singh!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார்.

இதையும் படியுங்கள் : கைகளில் கருப்பு பட்டை… #ManmohanSingh மறைவுக்கு இந்திய வீரர்கள் மரியாதை!

மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று அதிகாலை மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.