#Formula4carrace -க்கு எதிராக வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட அவசர வழக்கு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து…

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட அவசர வழக்கு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : “இந்தியாவில் #Monkeypox பாதிப்பு இதுவரை இல்லை” – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பி.என்.எஸ். பிரசாத் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ஆனால் இந்த வழக்கை இன்று பிற்பகலே அவசரமாக விசாரிக்க வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.