29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

கோலிவுட்டிற்கு அறிமுகமானார் லாரன்ஸின் தம்பி; புல்லட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும்  புல்லட் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறு ஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவி மரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி, ”சந்திரமுகி 2” செப்டம்பர் 28-ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘டைரி’ பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கதாநாயகனாக அவர் அறிமுகமாகிறார்.

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு புல்லட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. எல்வினுக்கு ஜோடியாக வைஷாலி ராஜ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த நிலையில், புல்லட் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading