தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ செயலி அறிமுகம்!

தமிழ் உள்பட 9 இந்திய மொழிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ செயலி இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.  ஹிந்தி,  பெங்காலி,  குஜராத்தி,  கன்னடம்,  மலையாளம்,  மராத்தி,  தமிழ்,  தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 9 இந்திய…

தமிழ் உள்பட 9 இந்திய மொழிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ செயலி இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. 

ஹிந்தி,  பெங்காலி,  குஜராத்தி,  கன்னடம்,  மலையாளம்,  மராத்தி,  தமிழ்,  தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் ஜெமினி AI செயலியை கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதுகுறித்து கூகுளின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“இன்று இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் 9 மொழிகளில் ஜெமினி செயலியை அறிமுகப்படுத்துகிறோம்.  மேலும் உள்ளூர் மொழிகளையும், பல புதிய அம்சங்களையும் சேர்த்து,  ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் ஆங்கிலத்தில் Google Messages-ல் Geminiஐ அறிமுகப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஜெமினி செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது iOS இல் உள்ள கூகுள் ஆப்ஸில் பதிவிறக்கம் செய்யலாம்.  சந்தா செலுத்தி உபயோகப்படுத்தும் முறையும் உள்ளது.  கணிதம்,  இயற்பியல்,  வரலாறு,  சட்டம்,  மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும்.  மேலும், இந்த ஜெமினி ஏஐ-யால் கோடிங் (coding) எழுதவும் முடியும்.  மேலும், பைதான் (Python),  ஜாவா (Java),  சி++ (C++) மற்றும் கோ (G0) போன்ற கணினி மொழிகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது.  கேள்வி எந்த அளவிற்கு தெளிவாக உள்ளதோ ஜெமினி ஏஐ அளிக்கும் பதில்களும் அந்த அளவிற்கு தெளிவாக இருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.