மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் – #RahulGandhi மலர்தூவி மரியாதை!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனையடுத்து புது டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்ற அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று  காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினரும் ராஜீவ் காந்தியின் உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாட திட்டமிட்டுள்ளனர். மேலும் அவரது ஆட்சியின் சாதனைகளை துண்டுப் பிரசுரங்களாக  விநியோகிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல மகாராஷ்டிர தலைநகர் மும்பையிலும் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ர மாநில்த்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சித் (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.