இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி காலமானார்.
மேலும் அவரது 93வது பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 28ம் தேதி அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணையுடன் பிரம்மாண்ட சதுக்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வீணை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். இந்த வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 6 அடி உயர மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.







