கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீடுபு பணியில் ஈடுபட்ட வருகின்றனர்.
கமாண்டன்ட் ஸ்ரீ அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில், மொத்தம் 60 வீரர்களைக் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை ஈடுபட்டு வந்தனர். இந்த நிலச்சரிவில் காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீடுபு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 18 பேர் வரை நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.




