புதிதாக நிலம் வாங்கப் போறீங்களா? உங்களுக்காக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப் பதிவுக் கட்டணத்தை 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம்…

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப் பதிவுக் கட்டணத்தை 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

பட்ஜெட் உரை வாசித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பதிவுத்துறை கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். நிலம் வாங்கும் ஏழைகளின் சுமையை போக்க பதிவுத்துறை கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும். அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் குடும்ப நலன் கருதி சிறப்பு நிதியாக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.