லால் சலாம் திரைப்படத்தின் இரண்டாம்  சிங்கிள் எப்போது!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தின் இரண்டாம்  சிங்கிள் ஜனவரி 15ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் …

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தின் இரண்டாம்  சிங்கிள் ஜனவரி 15ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார்.  மேலும் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் “தேர் திருவிழா” என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், லால் சலாம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஜன.15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

https://twitter.com/LycaProductions/status/1746132895494713554

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.