லட்சத்தீவில் உள்ள 97 சதவீத இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் கோயில் பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்கியது போல், மசூதிகளில் உள்ள உலமாக்களுக்குமலட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முகமது அபுபக்கர் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், சிறுபான்மையினரின் பொருளாதாரம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக நீதியரசர் ராஜேந்திர சச்சார் பரிந்துரையை அமல்படுத்தவுள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் என அவர் தெரிவித்தார்.







