லடாக்: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தால் மூழ்கி உயிரிழந்தனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான…

லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தால் மூழ்கி உயிரிழந்தனர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே லடாக் அருகில் உள்ள தவ்லத் பேட் ஓல்டி பகுதியில் வெள்ளத்தின் போது ஆற்றைக் கடப்பதற்கான வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வந்தது. இதற்காக டி-72 வகை ராணுவ பீரங்கியில் நேற்று மாலை 5 ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கியுடன் 5 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

உடனடியாக ராணுவ அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீட்புப் படையினர் தேடலில்  ஈடுபட்ட நிலையில்,  இன்று காலை 5 ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் 5 பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.