மூளைச்சாவு அடைந்த ஒரே மகனின் உடல் உறுப்புகள் தானம் – சுமை தூக்கும் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல்!

விபத்தில் மூளை சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த  நாகை  கொளப்பாடு கிராம…

விபத்தில் மூளை சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த  நாகை  கொளப்பாடு கிராம சுமை தூக்கும் தொழிலாளரின் மகன் முகேஷ் (26) . இளைஞரின்  உடல் உறுப்புகள், முகேஷின் பெற்றோர் விருப்பப்படி  தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  கண்கள், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள்  தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்புகள் மதுரை,  பெரம்பலூர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் துரிதமாக கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து முகேஷின் உறவினர் கணேசன் கூறுகையில், முகேஷ் உறவினர் வீட்டுக்கு சென்ற போது சாலை விபத்தில் படுகாயமடைந்ததால்  நாகை அரசு  மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், நாகை மருத்துவர்கள்   மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதின் அடிப்படையில் தஞ்சை வந்ததாகவும், தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளித்த நிலையில்,  முகேஷ் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றதும் உறவினர்கள்  உடல் உறுப்புகளைத் தானம் செய்திட முன்வந்ததையடுத்து  உடல் உறுப்புகளை தானம் செய்ததால் அவரது உடல் உறுப்புகள் பிறர் மூலம் வாழும் அவர்களையும் வாழ வைக்கும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.