பஸில் ஜோசப்புடன் இணைந்து நடிக்கும் எல்.கே. அக்‌ஷய் குமார் – டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு……!

மலையாள நடிகர் பஸில் ஜோசப்புடன் இணைந்து ’சிறை’ பட நடிகர் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படத்திற்கு ’ராவடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘சிறை’ படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் அறிமுக நடிகரான எல்.கே. அக்‌ஷய் குமாரின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் எல்.கே. அக்‌ஷய் குமார், மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான பஸில் ஜோசப்புடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்  S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K.ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸ் ஆகியவற்றை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அதன் படி படத்திற்கு ’ராவடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் உருவாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.