கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படத்திற்கபெற்றோர்கள், உறவினர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடைபெற்றதன் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று
அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படத்திற்கு
பெற்றோர்கள், உறவினர்கள் மலர்கள் தூவி மரியாதை. நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள் தீ விபத்து நடைபெற்ற பள்ளி முன் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்த
குழந்தைகளின் திரு உருவப்படத்திற்கு மலர் வளைய வைத்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்
பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி நிகழ்ந்த கோர தீ
விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழந்தனர் . 18 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. கோர சம்பவம் நடைபெற்றதன் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் உயிரிழந்த குழந்தைகள்
திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது . இறந்த குழந்தைகளின் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்
உள்ளிட்டோர் தீ விபத்து நடைபெற்ற பள்ளி முன் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்த
குழந்தைகளின் திரு உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினர்.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு விருப்பமான உணவுப் பொருட்களை படையலிட்டு
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.









