கும்பகோணத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய நோட்டுகளால் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்வரும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு வகையான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அமைக்கப்படும். இந்த விழாவில் பகவத் விநாயகருக்குப் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது முக்கியமான நிகழ்வாகும்.இந்நிலையில் பகவத் விநாயகர் கோயிலில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனைதொடர்ந்து விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று, பகவத் விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் குபேர விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் ‘குபேர விநாயகா’, ‘வெற்றி விநாயகா’ என்று கோஷங்கள் முழங்க வேண்டிக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.