முக்கியச் செய்திகள் தமிழகம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியூஸ்7தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து காப்புக்கட்டி பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி, வீதியாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

முன்னதாக கொரோனா தொற்றையடுத்து கடந்த ஆண்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி என்ற தமிழக அரசின் அறிவிப்பால் மக்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், திருவிழா முடியும்வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை தூத்துக்குடி எஸ்பி விளக்கமளித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்த சிறப்பம்சங்களை பார்க்கலாம்!

Gayathri Venkatesan

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Gayathri Venkatesan

நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!

Gayathri Venkatesan