குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.!

குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம் வி…

குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம் வி ஈ ரோடு பகுதியைச் சேர்ந்த
சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா (27 வயது) மருத்துவம் மேற்படிப்பு பயின்று
வந்தார்.  கடந்த அக்டோபர் 5ம் தேதி மாணவி சுகிர்தா வகுப்புக்கு செல்லாமல் அறையிலிருந்து உள்ளார். அன்று இரவு அறையிலேயே அவர் உடலை தளர்ச்சி அடைய செய்யும் ஊசியை உடம்பில் செலுத்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை சிவக்குமார் கொடுத்த புகாரி பேரில் குலசேகரம் போலீசார் உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவி தனது மரணத்திற்கு பேராசிரியர் பரமசிவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் ஹரிஷ், மாணவி பீரிதி ஆகியோர் தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்நிலையில், போலீசார் ஏற்கனவே மூன்று பேர் மீது 306 பிரிவின் கீழ் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேராசிரியர் பரமசிவத்தை
குலசேகரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.