இந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் கிருத்தி சனோன்!

நடிகர் தனுஷ் நடிக்கும் 3வது இந்தி படத்தில் நடிகை கிருத்தி சனோன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுது . இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராயின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

இப்படத்தை கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கிறது . ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு விஷால் சின்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு “தேரே இஸ்க் மேன்”  என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக இந்தி நடிகை கிருத்தி சனோன் இணைந்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.