#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – Suo motoவாக விசாரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S. ரேவதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்…

"Krishnagiri sexual assault case... should come forward and take up the investigation" - Women Lawyers Association Vice President's letter to the Supreme Court!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S. ரேவதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S.ரேவதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவராமனும், அவரது தந்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெரிய நபர்களை காப்பற்றுவதற்காக சிவராமனும், அவரது தந்தையும் பலிகடா ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது போல,
கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாகவும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க
வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும், விசாரணை நியாயமாக நடைபெறுகிறதா? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.