முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கோயம்பேட்டில் அனுமதியில்லை!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு ஆகியோர் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, கோயம்பேடு காய்கறி சந்தையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பைத் தீவிரமாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி

Saravana Kumar

மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Niruban Chakkaaravarthi

யார் இந்த பவானி தேவி?