கோவையில் பெண் காவல்துறையினருக்கு ஓட்டுநர் பயிற்சி!

கோவை மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு  ஓட்டுநர் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி  கோவை மாநகர பெண் காவல்துறையினரும் வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர்…

கோவை மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு  ஓட்டுநர் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி  கோவை மாநகர பெண் காவல்துறையினரும் வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் பயிற்சி விழா நடைபெற்றது.

நிகழ்வை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதையடுத்து முதற்கட்டமாக கோவை மாநகர  தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படை துறையில் பணியாற்றி வரும் 150 காவலர்களுக்கு பயிற்சி  தொடங்கியது.

இவர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்  இரு சக்கர வாகனங்கள் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமை வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே ஓட்டுநர் உரிமை பெற்றவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க படுவதாக தெரிவித்துள்ளனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.