சில கோரிக்கைகளை முன் வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) 5 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
ஐஎம்ஏவின் 5 கோரிக்கைகள் என்ன?
1. உறைவிட மருத்துவர்களின் (பயிற்சி மருத்துவர்) பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வாரத்திற்கு 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.








