#Thangalaan படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரந்த படக்குழு – இணையத்தில் வைரல்!

தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம்…

தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் படம் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.

மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.