கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் விதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 16க்கு நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அண்மை செய்தி: சென்னை: காவலர் கையை கடித்த இளம் பெண்ணின் வழக்கில் அதிர்ச்சி தகவல்
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீஸார் மறு விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








