பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக கொல்கத்தா அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதல் பவர்பிளேவிலேயே தனது 5 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. அதன் பின்னர் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல், கம்மின்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை 202 ரன்கள் வரை எடுத்து சென்றனர்.
இந்நிலையில், அந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்தை விட பந்து வீச அதிக நேரத்தை எடுத்து கொந்தற்காக அந்த அணியின் கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாக சென்னை அணியின் கேப்டன் தோனி, மற்றும் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







