சமீபத்தில் புதுச்சேரியில் அரசியல் குழப்பங்கள் உச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தற்போது துணை நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளதாகவும், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக புதுச்சேரிக்கு ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் கடந்த காலங்களில் தொடர் மோதல் போக்கு நிலவி வந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நாராயணசாமி, குடியரசுத் தலைவரிடம் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், பல போராட்டங்களையும், தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த பல எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.