திருமணத்திற்கு பிறகு கியாரா அத்வானிவின் முதல் போஸ்ட்..

திருமணத்திற்கு பிறகு கியாரா அத்வானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண படங்களை பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய…

திருமணத்திற்கு பிறகு கியாரா அத்வானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண படங்களை பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி முன்பு இருந்தே பரவியது.  இதனையடுத்து சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோதரா தீயாக பரவி வந்த திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருவரும் தங்களது திருமணம் குறித்து வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்ததோடு மட்டுமல்லாமல்  தங்களது திருமணத்தை பிரமாண்டமான முறையில் ராயல் வெட்டிங்கை நடத்த திட்டமிட்டனர். அதன்படி கடந்த பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் ப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் போன்ற நிகழ்வுகளும் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று திருமணம் நடைபெற்றது.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவான ஷெர்சா படத்தில் நடித்தபோது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும்  கியாரா அத்வானி இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இருவரது திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் பிரமாண்டமான முறையில்  நடைபெற்றது.

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற்  இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்றனர்.

திருமணத்திற்கு பின்பு முதன்முறையாக சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும்  கியாரா அத்வானி ஜோடி தனித்தனியாக தங்களது இன்ஸ்டா ஹேண்டிலில் தங்களது திருமண படங்களை பதிவிட்டு பின்வருமாறு எழுதியுள்ளனர்..

“எங்களது நிரந்தரமான முன்பதிவு முடிவடைந்தது. எங்களது பயணம் முன்னேற்றம் அடைய உங்களது அன்பு மற்றும் வாழ்த்துக்களை வேண்டுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். கியாரா – சித்தார்த் திருமணத்தால் பாலிவுட் சினிமாவே கொண்டாட்டத்தில் உள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.