ஸ்மிருதி ராணியுடன் கிச்சடி சமைத்த பில்கேட்ஸ்!

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியுடன் இணைந்து கிச்சடி சமைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் டெல்லியில்…

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியுடன் இணைந்து கிச்சடி சமைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தப் பிரசாரம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்தப் பிரசாரத்தில் பிரபல தொழிலதிபரும், கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்மிருதி இராணியுடன் இணைந்து கிச்சடி சமைத்துள்ளார் பில்கேட்ஸ். இந்த வீடியோவை ஸ்மிருதி ராணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளித்து அதை கிச்சடியில் சேர்க்கிறார் பில்கேட்ஸ். பின்னர், அதை சுவைத்துப் பார்க்கிறார்.

இதையும் படிக்க: டுவைன் ஜான்சன் நடித்த பிளாக் ஆடம் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு – DC ரசிகர்கள் உற்சாகம்

இந்த வீடியோவை ஸ்மிருதி ராணி பதிவிட்டு, பில்கேட்ஸ் தாளிப்புப் பொருட்களை கிச்சடியில் சேர்த்தபின் அது இந்தியாவின் சூப்பர் ஃபுட் ஆக அங்கீகரிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

https://twitter.com/smritiirani/status/1631308926066073602?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1631308926066073602%7Ctwgr%5E49221cf1114561a12d832bbc55ee7fec8e6a534b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-552590394362887437.ampproject.net%2F2302171719000%2Fframe.html

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் பில்கேட்ஸின் முதல் இந்தியப் பயணமாகும். இந்தப் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன் இந்தியா புதுமைக்கான சாத்தியம் குறித்து தனக்கு நம்பிக்கை அளிப்பதாக ட்விட்டரில் அவர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த இந்தியப் பயணத்தின்போது ரத்தன் டாடா, ஆனந்த் மகேந்திரா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைச் சந்தித்தார். மேலும், இந்த சுற்றுப் பயணத்தின்போது, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றம், சுகாதாரம் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.