ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வலம் வரும் கேஜிஎஃப் முதியவர்!

கோலார் தங்க வயலை சார்ந்த 59 வயது முதியவர் ஒரு சக்கரம் மட்டுமே உள்ள சைக்கிளை தானே தயாரித்து,  ஓட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.  மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கி…

கோலார் தங்க வயலை சார்ந்த 59 வயது முதியவர் ஒரு சக்கரம்
மட்டுமே உள்ள சைக்கிளை தானே தயாரித்து,  ஓட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார். 

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கி உள்ளார் கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் (கோலார் தங்க வயல்) பகுதியை சேர்ந்த 59 வயது முதியவர் ஸ்ரீதரன்.  20 வயதிலிருந்து பொதுசேவை செய்து வரும் இவர் தற்போது தரங்கம்பாடி காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கு சேவை செய்து வருகிறார்.  சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட இவர்,  ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு ஒருசக்கர வாகனத்தை தானே வடிவமைத்துள்ளார்.

தொடர்ந்து அதனை ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டார் . தொடக்கத்தில் இரண்டு ஊன்றுகோல் உதவியுடன் அந்த ஒருசக்கர சைக்கிளை ஓட்டி பழகி வந்த இவர் தற்போது படிப்படியாக ஊன்றுகோல் இல்லாமல் சைக்கிளை ஓட்டி வருகிறார்.  தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வருவதை பலரும் வியந்து ஆச்சரியத்துடன் பாராட்டுவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

வயது மூப்பிலும் தன்னம்பிக்கையால் இந்த சைக்கிளை ஓட்டுவதாகவும்,  கீழே விழுந்து அடிபட்டாலும் தொடர்ந்து முயற்சிப்பதால் தன்னால் ஒருசக்கர சைக்கிளை ஓட்ட முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.  இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு சக்கர சைக்கிளில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுசேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வயதானாலும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும்,  ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.  தினமும் தரங்கம்பாடியில் இருந்து பொறையார் வரை சாலையில் ஒரு
சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.