சபரிமலை சீசன் நெய்யபிஷேக பூஜையுடன் இன்று நிறைவு..!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் இன்று (ஜன.19)  நெய்யபிஷேக பூஜையுடன் நிறைவடைகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும்…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் இன்று (ஜன.19)  நெய்யபிஷேக பூஜையுடன் நிறைவடைகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பக்தர்களை கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக 2 நாட்களுக்கு பிறகு 30-ந் தேதி மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்கான மகரஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

இதனைத்தொடர்ந்து, பூஜை மற்றும் பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த நிலையில், மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும்.  மேலும், இரவு அத்தாள பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐய்யப்ப சாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று மீண்டும் சன்னிதானம் வந்து சேரும்.

அதேபோல், நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், 21-ந்தேதி காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்படும். அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு நடை அடைக்கப்பட்டு அத்துடன் 2023-2024 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவுபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.